உங்களைப் பற்றி உங்க தேசிய அடையாள அட்டை எண் சொல்லும் ரகசியங்கள்!

நீங்க எப்போதாவது உங்க தேசிய அடையாள அட்டை எண்ணைப் பார்த்து, இது எப்படி உங்களைக் குறிக்கிறதுன்னு யோசிச்சிருக்கீங்களா? அந்த எண்கள்ல உங்க பிறந்த தேதி, பாலினம் மட்டும் இல்லாம, இன்னும் நிறைய விஷயங்கள் பதுங்கியிருக்கு!

உதாரணமா, உங்க ID எண் 992151234Vன்னு இருந்தா:

 * பிறந்த ஆண்டு: முதல் இரண்டு எண்கள் (99) உங்களை 1999 ல பிறந்தவர் என்பதை குறிக்கும்.

 * பிறந்த நாள்: அடுத்த மூணு எண்கள் (215) உங்களை 1999 ல 215 வது நாள் பிறந்தவர். அது ஜூலை 31 ம் தேதிக்கு வரும்.

 * தொடர் எண்: அடுத்த மூணு எண்கள் (123) உங்களை அந்த நாள் பிறந்த 123 ஆவது நபர் ஆவார்.

 * பாலினம்: பிறந்த நாள் எண் 500 க்கு மேல இருக்குமென்றால் ஆண் ஆகவும் 500 இற்கு குறைவாக இருப்பின் பெண் ஆகவும் இருப்பர்.

உதாரணமாக, பிறந்த நாள் எண் 215 எனின் அவர் ஒரு பெண்ணாக இருப்பார்.

 * சரிபார்ப்பு எண்: கடைசி எண் (4) எல்லா எண்களும் சரியா இருக்கானு சரிபார்க்க உதவும்.

இது ஏன் முக்கியம்?
 * அடையாளத்தை உறுதி செய்ய: வங்கி, பாஸ்போர்ட் எல்லாத்துக்கும் இந்த எண் முக்கியம்.
 * வரலாற்று தகவல்: உங்க பிறந்த தேதி எல்லாம் தெரியும் இல்ல?
 * பாதுகாப்பு: இந்த எண்ணை யாரும் தவறா பயன்படுத்த முடியாது.

கவனமா இருங்க:
உங்க ID எண் உங்களைப் பத்தி நிறைய சொல்லும். அதனால,
 * உங்க ID கார்டை எப்பவும் பாதுகாப்பா வச்சுக்கோங்க.
 * யார்கிட்டயும் உங்க ID எண்ணை சொல்லாதீங்க.
 * ஆன்லைன்ல யாரும் உங்க ID எண்ணைக் கேட்டா கொடுக்காதீங்க.
உங்க ID எண்ணைப் பத்தி இப்போ தெரிஞ்சுக்கிட்டீங்களே!

Previous Post Next Post